தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
ஜெய் ஆகாஷ் நடித்துள்ள படம் அமாவாசை, இந்தப் படம் அமாவாசய்யா என்ற பெயரில் தெலுங்கிலும் வெளிவருகிறது. ராகேஷ் சவந்த் என்பவர் தயாரித்து இயக்கி உள்ளார். சையது அகமது இசை அமைத்துள்ளார். படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தில் இடம் பெற்றிருந்த ஆபாச காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை கண்டு திடுக்கிட்ட தணிக்கை குழுவினர் இந்தப் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தர முடியாது என்று முதலில் தெரிவித்துவிட்டனர்.
நீங்கள் சொல்லும் காட்சிகளை நீக்கி விடுகிறோம் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டதாம். அதன் பிறகு 5 காட்சிகளை முழுமையாக நீக்கும்படியும், பல காட்சிகளின் நீளத்தை குறைக்கும்படியும் தணிக்கை குழுவினர் சொன்னார்கள். தயாரிப்பு தரப்பு அவற்றை நீக்கியும், குறைத்தும் தணிக்கை குழுவிற்கு மீண்டும் அனுப்பி வைத்தனர். அதன் பிறகும் படத்திற்கு ஏ சான்றிதழ் தான் கொடுத்திருக்கிறது தணிக்கை குழு. இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ் ஜோடியாக 7 புதுமுக ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திரைக்கு வருகிறது.