அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் சீசன்-2வில் மைனா என்ற கேரக்டரில் நடித்தவர் நந்தினி. அதையடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டார்லிங் தொடரில் ருக்கு என்ற வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், சுட்டி சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராகியிருக்கும் நந்தினி, மைனாவை நான் ரொம்பவே மிஸ் பண்றேன் என்று பீல் பண்ணுகிறார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியின் பிரண்டாக மைனா என்ற ரோலில் நடித்தேன். அந்த வேடத்தில் நடிக்க எனது அம்மாவை நான் ரோல்மாடலாக எடுத்துக்கொண்டு நடித்தேன். அது பெரிய ரீச் சைக்கொடுத்தது. அதன்பிறகு சில காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நான், இப்போது ஜீ தமிழில் டார்லிங் தொடரில் ருக்கு வேடத்தில் நடிக்கிறேன். இது வும் காமெடி நிகழ்ச்சிதான். முதல் தொடரில் மதுரை தமிழ் பேசி நடித்த நான், இந்த தொடரில் கோவை தமிழ் பேசி நடிக்கிறேன். இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சாகிக்கொண்டிருக்கிறது.
என்றாலும், மைனா கேரக்டரை என்னால் மறக்க முடியவில்லை. ரசிகர்களை அது பெரிய அளவில் கவர்ந்தது போன்று என்னையும் வெகுவாக கவர்ந்த கதாபாத்திரமாகியிருக்கிறது. அதனால் மைனாவை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக பீல் பண்ணுகிறேன். மேலும், நான் நடிக்கும்போது அதிகமாக காமெடி செய்வதாக நேயர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் காமெடி செய்ய வேண்டும் என்று செய்யவில்லை. நான் செய்யும் விசயங்கள் மற்றவர்களுக்கு காமெடியாக தெரிகிறது. நான் கோபத்துடன் பேசினாலும் அதைப்பார்த்து சிரிக்கிறார்கள். ஆக, எனக்கு காமெடி நன்றாக வருவது தெரிகிறது.
அதனால் சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் காமெடி மற்றும் நல்ல வேடங்கள் வந்தால் நடித்து பெருவாரியான ரசிகர்களை கவர வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால் நல்ல சினிமா வாய்ப்புகளையும் வரவேற்கிறேன் என்கிறார் நந்தினி.