பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு ரோல்களில் நடித்தவர் ராதாரவி. ஒருகாலத்தில் திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். எம்எல்ஏ.,வாக பதவி வகித்தார். ஆனால் தற்போது அதிமுக., கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் திமுக.,வில் ஐயக்கியமாகி இருக்கிறார். கடந்த ஒரு மாதமாகவே ராதாரவி திமுக.,வில் இணைய உள்ளார் என்று செய்திகள் வெளியான நிலையில், திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுக.,வில் இணைந்தார் ராதாரவி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி, ‛‛திமுக.,வில் மீண்டும் இணைந்தது, என் குடும்பத்திற்கே மீண்டும் வந்த உணர்வை தருகிறது. அதிமுக., சிதறுகாய் போன்று உடைந்துவிட்டதால் இனி தமிழகத்தை திமுக.,வால் மட்டுமே காப்பாற்ற முடியும்'' என்றார்.