துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ்குமாரை 'டார்லிங்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தவர் சாம் ஆண்டன். டார்லிங் படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து, 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற படத்தை இயக்கினார். 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' தயாரிப்பின் போது அந்தப் படத்தை தயாரித்த லைகா பட நிறுவனம் இயக்குநருக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று அப்போது பேச்சு எழுந்தது.
அது மட்டுமல்ல படம் வெளியான நேரத்திலும் பப்ளிசிட்டி விஷயங்களை சரியாக கையாளவில்லை என்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் தரப்பே லைகா மீது கடுப்பில் இருந்தது. இதனால் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் தோல்வியடைந்தது. அதனால் அப்செட்டான சாம் ஆண்டன், அடுத்தப்படத்தில் மீண்டும் வெற்றியை எட்டிப்பிடித்துவிடலாம் என்று கனவு கண்டார்.
ஜி.வி.பிரகாஷ்குமாரிடம் கதை சொல்ல விரும்பினார். அவரோ, சாம் ஆண்டனிடம் கதை கேட்க நேரம் ஒதுக்கவே இல்லை. இதனால் சாம் ஆண்டன், ஜீவாவிடம் கதை சொன்னார். அவர் சொன்ன கதை ஜீவாவுக்கு பிடித்துப்போக விரைவில் ஜீவா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன். அதற்கு முன்னதாக, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ' 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்து இயக்க இருக்கிறார் சாம் ஆண்டன்!