எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
1981ம் ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி ரஜினிகாந்த்-லதா ஆகிய இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், தனது ஒவ்வொரு பிறந்த நாள் மற்றும் திருமண நாளை குடும்பத்தாருடன் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார் ரஜினி. அதேபோல் ரஜினியின் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
அந்தவகையில், நேற்று பிப்ரவரி 26-ந்தேதி ரஜினிக்கு 36வது திருமண நாள் ஆகும். அதனால் ரஜினிக்கு திருமண நாள் வாழ்த்து சொல்ல தமிழகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் சென்னையிலுள்ள ரஜினியின் வீட்டிற்கு வருகை புரிந்தனர். அப்போது ரஜினியை வாழ்த்தியதோடு, படையப்பா ஸ்டைலில் ஒரு சிலை செய்து அவருக்கு பரிசளித்துள்ளனர். இதையொட்டி சென்னையில் ரஜினி வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் பெரிய அளவில் ரஜினி-லதா ரஜினி இடம்பெற்ற பேனர்களை வைத்து திருமணநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.