மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நூற்றுக்கணக்கான படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்தவர் சூப்பர் சுப்பராயன். சமீபத்தில் வெளியான ஜித்தன்-2, திருநாள், சிவனாண்டிக்கும் விருமாண்டிக்கும் உள்பட சில படங்களுக்கு சண்டை பயிற்சி கொடுத்தவர், விரைவில் வெளியாக உள்ள பொட்டு படத்திலும் பணியாற்றியுள்ளார். மேலும் அவ்வப்போது சண்டை காட்சிகளில் நடித்து வந்த சூப்பர் சுப்பராயன், தற்போது சில படங்களில் முக்கிய வில்லனாகவும் நடித்து வருகிறார்.
அந்தவகையில், கொம்பன் படத்தில் கவுண்டன் ராமசாமி என்ற வேடத்தில் நடித்தவர், தற்போது ஆர்யா நடித்துள்ள கடம்பன், சித்தார்த்தின் தி ஹவுஸ் நெக் ஸ்ட் டோர், கெளதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் போன்ற படங்களில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார். இதில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் சித்தார்த் தயாரித்து நடிக்கும் தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் என்ற படத்தில் தாதாவாக நடித்துள்ளார் சூப்பர் சுப்பராயன்.
தமிழில் குருதி என்ற பெயரில் வெளியாகும் இந்த படத்தில் முதலில் சாதுவாக இருக்கும் சித்தார்த், பின்னர் வில்லன் சூப்பர் சுப்பராயனுடன் மோதும் காட்சிகள் படுபயங்கரமாக படமாக்கப்பட்டுள்ளதாம். அந்த வகையில், ஜிகர்தண்டாவிற்கு பிறகு இந்த குருதி, சித்தார்த்துக்கு இன்னொரு அதிரடியான ஆக்சன் படமாக அமையும் என்கிறார்கள்