Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமன்னா பாணியில் நடிக்க தயாராக இருக்கிறேன்! -ஹிமோனா நாயுடு

27 பிப், 2017 - 09:27 IST
எழுத்தின் அளவு:
himona-naidu-to-take-tamanna-as-her-role-model

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் கயல் ஆனந்தியின் பிரண்டாக நடித்தவர் ஹிமோனா நாயுடு. அதையடுத்து தற்போது பதனி என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஹோம்லியாக நடித்திருக்கும் அவர், எதிர்காலத்தில் கதைக்கேற்ப கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறாராம்.


அதுகுறித்து அவர் கூறுகையில், நான் பதனி படத்தில்தான் முதலில் கமிட்டானேன். இந்த படத்தில் நடித்து வந்தபோது ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் கயல் ஆனந்திக்கு பிரண்டாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. பெரிய இயக்குனரின் படம் என்பதால் மறுக்க மனமில்லாமல் அந்த வேடத்தில் நடித் தேன். அப்படத்தில் முதலில் எனக்குத்தான் ஹீரோயினி அறிமுகம் போல் காட்சிகள் இருக்கும். என்னிடம் ஜி.வி.பிரகாஷ் லவ் பிரபோஸ் செய்வார். அதன்பிறகு கலாய்க்கிற காட்சிகள் இருக்கும். அது நன்றாகவே ரீச் ஆனது.


இப்போது பதனி படத்திலும் நடித்து முடித்து விட்டேன். படம் ரிலீசுக்கு தயாராக விட்டது. இந்த படத்தில் ஹோம்லியான வேடத்தில் நடித்துள்ளேன். காதல் கதை என்பதால், முன்ன பின்ன காதலித்த அனுபவம் இல்லாத நான், இயக்கு னர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே பிரதிபலித்தேன். அது நன்றாக வந்திருக்கிறது. கண்டிப்பாக இளவட்ட ரசிகர்களை கவரும் வகையில் இந்த படத்தின் கதையும் எனது நடிப்பும் அமைந்துள்ளது. கடவுள் இருக்கான் குமாரு படம் கொடுத்த ரீச்சை விட இந்த படம் இன்னும் அதிகப்படியான ரீச் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதையடுத்து நடிப்பதற்கு சில கதைகள் கேட்டுள்ளேன். மார்ச் மாதம் முதல் அந்த படங்களில் கமிட்டாகி நடிப்பேன்.


மேலும், எனக்கு ரோல் மாடல் என்றால், ஐஸ்வர்யாராய், குஷ்புவைதான் சொல் வன். என்றாலும், இன்றைய காலகட்டத்து நடிகைகளில் எனக்கு பிடித்தமானவர் தமன்னா. ஹோம்லி, மாடர்ன், கிளாமர் என எல்லாவிதமான வேடங்களிலும் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக, கிளாமர் காட்சிகளில் அழகியலுடன் நடித் ள்ளார். அதனால் கிளாமர் கலந்த கதாபாத்திரங்கள் என்கிறபோது கதைக்கு தேவையான அளவு நடிப்பேன். முக்கியமாக யாரும் முகம் சுழிக்காமல் ரசிக்கும் வகையில், கிளாமரை வெளிப்படுத்தி நடித்து இளட்ட ரசிகர்களின் மனங்கவர்ந்த நாயகியாக திகழ்வேன் என்கிறார் ஹிமோனா நாயுடு


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in