‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தம்பிக்கோட்டை படத்திற்கு பிறகு செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்த மீனாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனபோதும் திரிஷ்யம் உள்பட சில மலையாளப் படங்களில் நடித்தார். அதோடு திரிஷ்யம் படம் தமிழில் கமல் நடிப்பில் ரீமேக் ஆனபோது அதில் நாயகியாக நடிக்க முயற்சி எடுத்தார் மீனா.ஆனால் கமலின் பலத்த சிபாரிசின்பேரில் அந்த வாய்ப்பு கெளதமிக்கு சென்று விட்டது. அதனால் இப்போதுவரை தமிழில் படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் மீனா.
ஆனால், தனது மகள் நைனிகாவை விஜய் நடித்த தெறி படத்தில் விஜய்யின் மகளாக அறிமுகம் செய்தார். அப்படத்தில் நடித்த நைனிகா ஒரே படத்தில் பெருவாரியான தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அதையடுத்து சில படங்கள் நைனிகாவை தேடிச்சென்றபோதும், சிறிய கம்பெனி படங்கள் என்பதால் அவற்றை தவிர்த்து வந்த மீனா, தற்போது மலையாளத்தில் மம்மூட்டி-நயன்தாரா நடித்த பாஸ்கர் த ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கில் நைனிகாவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். அரவிந்த்சாமி-அமலாபால் ஜோடி சேரும் இந்த படத்தில் மலையாளத்தில் பேபி அனிகா நடித்த ரோலில் அவர்களின் மகளாக நைனிகா நடிக்கிறார்.