Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏஜென்ட் சிவா என்று டைட்டிலுக்கு எதிர்ப்பு

25 பிப், 2017 - 16:34 IST
எழுத்தின் அளவு:
Oppose-for-Agent-Siva-title

அகிரா ஹிந்திப்படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அப்படத்தின் தோல்வியை மறந்துவிட்டு, மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார்.


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.


மகேஷ் பாபுவுக்கு தமிழகத்திலும் நிறைய ரசிகர்கள் இருப்பதால் மாநில ரசிகர்களுக்கும் பரிச்சயமான முகங்களை நடிக்க வைத்திருக்கிறார் முருகதாஸ். இந்தப்படத்துக்கு இதுவரை தலைப்பு வைக்கவில்லை. தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் பொதுவான டைட்டில் வைக்க வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளனர்.


இதற்கிடையில் ஏஜென்ட் சிவா என்று டைட்டில் வைக்க இருப்பதாக தகவல் வெளியானது. மகேஷ்பாபுவின் ரசிகர்கள் ஏஜென்ட் சிவா என்று டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இப்போதைக்கு டைட்டில் வைக்காமல் 'மகேஷ் 23' என்று தற்காலிக தலைப்புடன் படமாகி வருகிறது.


இப்படத்தை, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜூன் மாதம் 23ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கின்றனர். அதற்கு முன்னதாக டைட்டிலுன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 29 ஆம் தேதி வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in