டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தாண்டு முதல்படமே ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் எனும் வெற்றியோடு துவக்கியிருக்கிறார் அக்ஷ்ய் குமார். ஜாலி எல்எல்பி-2 வெற்றியை அடுத்து அடுத்தப்படியாக ‛கோல்டு' எனும் படத்தில் நடிக்கிறார். இயக்குநர் ரீமா காக்தி இயக்குகிறார். இது ஒலிம்பிக்கில் இந்திய அணி ஹாக்கி போட்டியில் மூன்று முறை தங்கம் வெல்ல காரணமாக இருந்த பயிற்சியாளர் பல்பீர் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது. இதில் பல்பீர் சிங் வேடத்தில் அக்ஷ்ய் குமார் நடிக்கிறார். ஹாக்கி பயிற்சியாளராக நடிப்பதாக அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அக்ஷ்ய். இதற்கான ஏற்பாடு மும்பையில் உள்ள மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோல்டு படம், அடுத்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.