‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
எல்லா நடிகர்களுக்குமே ஒரு படத்திலாவது பெண் வேடத்தில் நடித்து விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். கமல்ஹாசன் அவ்வை சண்முகி, ரஜினிகாந்த் பணக்காரன், விக்ரம் கந்தசாமி, பிரசாந்த் ஆணழகன் சிவகார்த்திகேயன் ரெமோ இப்படி பல உதாரணங்கள் உண்டு இப்போது பரத் பெண் வேடமிட்டு பொட்டு என்ற படத்தில் நடிக்கிறார்.
சவுகார் பேட்டை படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்கும் இந்தப் படத்தை ஷாலோம் ஸ்டூடியோ சார்பில் ஜான் மேக்ஸ் தயாரிக்கிறார். பரத்துடன் இனியா, நமீதா, சிருஷ்டி டாங்கே, மனிஷா யாதவ், நான் கடவுள் ராஜேந்திரன் தம்பி ராமய்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். அம்ரீஷ் இசை அமைக்கிறார், இனியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இது மந்திர தந்திரங்கள் நிறைந்த பேய் கதை. இதில் பரத் பெண் வேடமிட்டு ஆண்களை மயக்கி அவர்களை பழி தீர்க்கிறமாதிரியான திரைக்கதை என்கிறார்கள். பரத் பெண்ணாகவும், கொடூர அகோரியாகவும் நடித்துள்ளார். அவருக்கு மூன்று வித கெட்-அப்கள் இருக்கிறதாம். படத்தின் பாடல்களை இன்று மலேசியாவில் வெளியிடுகிறார்கள். ஏப்ரலில் படத்தை வெளியிடுகிறார்கள்.