ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். பாடகராக வலம் வந்த விஜய் யேசுதாஸ்க்கு நடிக்கும் ஆர்வம் வந்தது. மலையாள படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். அதன் பிறகு மாரி படத்தில் வில்லனாக அறிமுகமானர். தற்போது படை வீரன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிவிட்டார். இதில் தேனியை சேர்ந்த முரட்டு இளைஞனாக அவர் நடிக்கிறார். அவருடன் இயக்குனர் பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அம்ரிதா என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர்களுடன் கல்லூரி அகில், கலையரசன், இயக்குனர் மனோஜ்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
மணிரத்னம் உதவியாளர் தனா இயக்குகிறார். ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். படப்பிடிப்புகள் தேனி பகுதியில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் மூலம் விஜய் யேசுதாஸ் தன்னை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக் கொள்ளும் கனவில் இருக்கிறார்.