‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தெலுங்குத் திரையுலகத்தில் அண்ணன் தம்பிகளான சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகிய இருவரின் ரசிகர்கள் பலம் என்பது மிகப் பெரும் சக்தியாக இருக்கும் ஒரு விஷயம். மற்ற முன்னணி நடிகர்களைக் காட்டிலும் அவர்களிருவரின் ரசிகர்களுக்கு இடையேயும் அடிக்கடி போட்டி என்பது பலமாகவே இருக்கும். சிரஞ்சீவி நடிப்பை விட்டு அரசியல் பக்கம் சென்ற சமயத்தில், பவன் கல்யாணின் திரையுலக வளர்ச்சி மிகவும் அதிகமாகியது.
அதன் பின் அரசியலிலும் பவன் கல்யாண் இறங்கி, சிரஞ்சீவிக்கும் ஒரு சவாலாகவே இருந்தார், இப்போதும் இருக்கிறார் என்று சொல்பவர்கள்தான் அதிகம். சிரஞ்சீவி மீண்டும் நடிக்க வந்த போதும் அதுவும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. கைதி நம்பர் 150 படம் பல புதிய சாதனைகளைப் படைத்தது. தன்னுடைய பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டுமென்ற கட்டாயம் பவன் கல்யாணுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் இன்னும் அதிகமானதாகவே இப்போதும் கருதுகிறார்கள்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பவன் கல்யாண் நடித்து விரைவில் வெளிவர உள்ள கட்டமராயுடு படத்தின் டீசர் அமைந்துள்ளது. சிரஞ்சீவி நடித்து வெளிவந்த கைதி நம்பர் 150 பட டீசரின் சாதனையை கட்டமராயுடு படத்தின் டீசர் முறிடியத்துள்ளது.
கைதி நம்பர் 150 டீசரை யு டியூபில் இதுவரை 77 லட்சத்து 47 ஆயிரம் பேர்தான் பார்த்துள்ளனர். அந்த சாதனையை கட்டமராயுடு டீசர் 78 லட்சத்து 17 ஆயிரம் பேர் பார்த்து முறியடித்துள்ளனர்.
கட்டமராயுடு படம் வெளியாகும் போது வசூலிலும் கைதி நம்பர் 150 படத்தை முறியடிக்க வாய்ப்புகள் அதிகம் என டோலிவுட்டில் இப்போது பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித் நடித்து வெளிவந்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்தான் கட்டமராயுடு படம் என்பது குறிப்பிடத்தக்கது.