ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கையில் திடீரென முளைக்கும் இரும்பு விரல்களை கொண்ட சூப்பர் ஹீரோ படம் வோல்வெரின். கடந்த 17 வருடங்களில் பல பாகங்கள் வந்துவிட்டது. அத்தனை பாகங்களிலும் ஹக் ஜாக்மேன்தான் ஹீரோ. தற்போது இதன் புதிய பாகமாக வெளிவருகிறது லோகன். இதில் ஹக் ஜாக்மேனுடன் பேட்ரிக் ஸ்வார்ட், ரிச்சர்ட் கிரன்ட், பாய்ல்ட் ஹோல்பெர்க், டிவைன் கீன் நடித்துள்ளனர். 2013ம் ஆண்டு வெளிவந்த வோல்வெரின் படத்தை இயக்கிய ஜேம்ஸ் மென்கோல்ட் இயக்கி உள்ளார், ஜான் மதிசென் ஒளிப்பதிவு செய்துள்ளார், மெர்கோ பெல்ட்ரமி இசை அமைத்துள்ளார்.
நவீன தொழில்நுட்பம், பிரமாண்ட கிராபிக்ஸ் வேலைகளுடன் விறுவிறுப்பாக தயராகி இருக்கிறது லோகன். அனேகமாக வோல்வெரின் வரிசை படங்களில் இதுதான் கடைசி பாகமாக இருக்கும் என்கிறார்கள். கடந்த மாதம் 17ந் தேதி அமெரிக்காவில் வெளியாகி வெற்றிகரமா ஓடிக் கொண்டிருக்கிறது. டுவென்டியத் செஞ்சுரி பாக்ஸ் இந்தியாவில் வருகிற மார்ச் 3ந் தேதி வெளியிடுகிறது. ஆங்கிலத்துடன், இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறது.