‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாயும் புலி, நானும் ரெளடிதான், தில்லுக்குத்துட்டு படங்களுக்குப்பிறகு ஆனந்தராஜின் மார்க்கெட் மறுபடியும் சூடுபிடித்து விட்டது. மேலும் ஒருகாலகட்டத்தில் அதிரடி வில்லனாக நடித்து வந்த அவர், இப்போது காமெடி கலந்த வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது புரூஸ்லி, கதாநாய கன், மரகதநாணயம் உள்ளிட்ட பல படங்களில் அவர் பிசியாக நடித்து வருகிறார்.
இதில், விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கும் கதாநாயகன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார் ஆனந்தராஜ். விஷ்ணுவிஷாலுடன் கேத்ரின் தெரசா, சூரி, கெஸ்ட் ரோலில் விஜயசேதுபதி என பலர் நடிக்கும் இந்த படத்தில் ஆனந்தராஜை சுற்றித்தான் கதை பின்னப்பட்டுள்ளதாம். அந்த வகையில், அவர் இந்த படத்தில் காமெடி கலந்த வில்லனாக நடித்து வருகிறார்.அந்தவகையில், நானும் ரெளடிதான் படத்தை விடவும் ஆனந்தராஜின் கேரக்டர் இந்த படத்தில் பெரிதாக பேசப்படும் என்கிறார்கள்.