'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இப்போது ஹாலிவுட் நடிகை. அவர் நடித்த டிரிபிள் எக்ஸ் படம் இதுவரை 2 ஆயிரத்து 75 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படங்களிலேயே இதுதான் அதிகம் வசூலித்த படம். இந்தப் படத்தில் தீபிகா, ஹாலிவுட் நடிகர் வின் ஸ்டீலுடன் நடித்தார். கடந்த ஜனவரி 20ந் தேதி படம் வெளிவந்தது. இதில் தீபிகா ஹாலிவுட் நடிகைகளின் பாணியில் முத்தக்காட்சி, பிகினி உடை என புகுந்து விளையாடி இருந்தார். தீபிகா நடித்திருப்பதால் இந்தியாவில் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இந்தியாவில் மட்டும் 54 கோடி ரூபாய் வசூலித்தது. தமிழ்நாட்டில் மட்டும் இந்தப் படம் ஏனோ ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை.