ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உச்ச நடிகரை வைத்து மலேசிய தாதா கதையை எடுத்த இயக்குனர் அடுத்து உச்ச நடிகரை வைத்து எடுக்கப்போகும் படத்துக்கு இப்போதே நடிகர்களை பிக்ஸ் பண்ணத் தொடங்கிவிட்டார். அடுத்த படத்தில் உச்ச நடிகருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான வித்தியாசமான பாலன் நடிகையை நடிக்க வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு அவர் "என்னை ஒரு காலத்தில் அழகில்லாதவள் நடிக்கத் தெரியாதவள்னு விரட்டி அடிச்ச தமிழ் படத்தில் நான் நடிக்க மாட்டேன்"னு உறுதியா சொல்லிட்டாராம். இருந்தாலும் தயங்காத இயக்குனர் தான் இயக்கிய படங்களின் சிடிக்களை அவருக்கு அனுப்பி "பார்த்துட்டு முடிவு பண்ணுங்க"ன்னு சொல்லியிருக்காராம். அதன் அடிப்படையில் தான் சமீபத்தில் உச்சநடிகரின் படத்தில் ஹீரோயினாக நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியானதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.