நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
5 ஹீரோயின்களை வைத்து நான் அவனில்லை படத்தின் ரீமேக்கையும், அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கியவர் செல்வா. அவர் தற்போது அரவிந்த்சாமி, ரித்விகா சிங் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கணேஷ் தயாரிக்கிறார். கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்திலும் அரவிந்த்சாமி நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டரில்தான் நடிக்கிறாராம். தன் அழகை காட்டி பெண்களை விதவிதமாக ஏமாற்றுவாராம். ரித்திகா சிங்குடன் நந்திதா, சாந்தினி, ஹாசினி ஆகியோரும் நடிக்கிறார்கள். அரவிந்த் சாமியை துரத்தும் போலீஸ் அதிகாரியாக சிம்ரன் நடிக்கிறார். இவர்கள் தவிர ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட், ஓஏகே.சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் தலைப்பு வணங்காமுடி என்று கூறப்படுவதை தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை விரைவில் அதனை அறிவிப்போம் என்கிறார்க்ள.