‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இயக்கம்-நடிப்பு என ரொம்ப பிசியாகி விட்டார் சமுத்திரகனி. அந்த வகையில், அப்பா படத்தை அடுத்து அவர் தொண்டன் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அப்பா படத்தில் இன்றைய கல்வி நிலை குறித்து படமாக்கிய அவர், தொண்டனில் சமூகத்துக்கு தொண்டு செய்யும் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தனுஷின் விஐபி-2விலும் அப்பா வேடத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல், அப்பா படத்தை மலையாளத்தில் ஜெயராமை வைத்து இயக்கி வரும் சமுத்திரகனி, 1971 பியாண்ட் பார்டர்ஸ் என்ற மலையாள படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்கிடையே தமிழில் ஆண்தேவதை என்ற படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார். ஆக, நடிப்பு, இயக்கம் என்று படு பிசியாக இயங்கிக்கொண்டிருக்கும் சமுத்திரகனி, ஒரு நாளைகூட வேஸ்ட் பண்ணுவதில்லையாம். ஏதாவது ஒருநாளில் எந்த வேலையும் இல்லை என்பது போன்ற நிலை ஏற்பட்டால், முன்னதாகவே தான் நடிக்கும் ஏதேனும் ஒரு பட டைரக்டரை தொடர்பு கொண்டு, இந்த நாளில் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லி அந்த ஓய்வு நாளையும் பிசியாக்கிக்கொள்கிறாராம் சமுத்திரகனி.