'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடித்த அமரகாவியம் படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். அதையடுத்து இன்று நேற்று நாளை, ஒருநாள் கூத்து, வெற்றிவேல், ரம் என பல படங்களில் நடித்தார். ஆனால் எந்த படத்திலும் அவரது நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. அதோடு அவர் நடித்த படங்களும் பெரிய ஹிட்டடிக்கவில்லை. இந்தநிலையில், அமரகாவியம் படத்தில் மியாவை தமிழுக்கு கொண்டு வந்த டைரக்டர் ஜீவா சங்கர், விஜய் ஆண்டனியை வைத்து தான் இயக்கியுள்ள எமன் படத்தில் மீண்டும் மியாவை நாயகியாக்கினார்.
அதோடு, முந்தைய படங்களை விட இந்த படத்தில் அவரை வெயிட்டான அதாவது ஒரு நடிகை வேடத்தில் நடிக்க வைத்துள்ளார் ஜீவா சங்கர். கூடவே மிதமான கிளாமர் நாயகியாகவும் இந்த படத்தில் உருவெடுத்துள்ள மியா ஜார்ஜ்க்கு எமன் படத்தில் நடிக்க 17 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதனால் அடுத்தபடியாக தன்னை புக் பண்ண வந்த தயாரிப்பாளர்களிடம் 20 லட்சம் ரவுண்டாக கேட்கிறாராம் மியா. அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள், எமன் ரிசல்ட் டுக்குப்பிறகு மியாவை புக் பண்ணிக்கொள்ளலாம் என்று வெயிட்டிங்கில் உள்ளனர்.