பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை அமலாபால், இயக்குநர் விஜய் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். மைனா, தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அமலாபால். இவருக்கும், சினிமா இயக்குனர் விஜய்க்கும், 2014 ஜூனில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின், சினிமாவில் அமலாபால் நடிப்பதை, விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை என, கூறப்படுகிறது. இதையடுத்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சுமுகமாக பிரிந்து விடுவது என, முடிவெடுத்தனர்.
2016 ஆகஸ்ட்டில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், இருவரும் ஆஜராகி, பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். ஆறு மாதங்களுக்கு பின், இவ்வழக்கு, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பூங்குழலி முன், கடந்த சனிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. இருவரும் நேரில் ஆஜராகி, சுமுகமாக பிரிவதாக, மனு தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து, விவாகரத்து வழக்கு உத்தரவை, பிப்., 21க்கு, நீதிபதி பூங்குழலி தள்ளிவைத்தார். அதன்படி, இன்று அமலாபால் - விஜய் இருவருக்கும் சட்டப்படி விவாகரத்து வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.