ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல மலையாள நடிகை மியாக ஜார்ஜ். அமரகாவியம் படத்தின் மூலம் அறிமுகமான மியா அதன் பிறகு ஒரு நாள் கூத்து, ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது விஜய் ஆண்டனியுடன் எமன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவர் நடிகையாகவே நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எமன் படத்தில் நான் நடித்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றது. ஒன்று, என்னை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் ஜீவா சங்கர், மற்றொன்று, எப்போதுமே தனித்துவமான தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி. ஜீவா சங்கரோடு நான் இணைந்து பணியாற்றி இருக்கும் இரண்டாவது படம் எமன். அமரக்காவியம் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் தான் நான் இந்த எமன் படத்தில் நடித்து இருக்கின்றேன்.
அஞ்சனா எனும் ஒரு நடிகையின் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றேன். அதுமட்டுமின்றி. இந்த படத்தில் எனக்கு முதல் முறையாக தனி பாடல் இருக்கின்றது. அந்த பாடலில் என்னை அழகாக காட்டியிருக்கிறார்கள். என்னை நானே ரசிக்கும்படியாக இருந்தது. நடிகையாக நடிப்பது வித்தியாசமாக இருந்தது, எளிமையாகவும் இருந்தது. வித்தியாசமான நல்ல அனுபவத்தையும் கொடுத்தது என்கிறார் மியா ஜார்ஜ்.