தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
அறிமுக இயக்குநர் சங்கல்ப் இயக்கத்தில், பி.வி.பி சினிமாஸ் மற்றும் மேட்னி மூவி எண்டர்டைன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த படம் - காஸி. 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுப்பட்ட காஸி படத்தில், ராணா, டாப்ஸி, கே.கே.மேனன், அதுல் குல்கர்னி, நாசர் மற்றும் மறைந்த ஹிந்தி நடிகர் ஓம் பூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்திய தொழில்நுட்பக்கலைஞர்களைக் கொண்டு டைட்டானிக் படத்துக்கு நிகரான படமாக காஸி படம் உருவாக்கப்பட்டிருப்பதாக பாராட்டப்பட்டது. இந்திய சினிமா வரலாற்றில் கடல் மற்றும் கடலக்கடியில் படமாக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமை பெற்ற காஸி படத்தில் இசை, ஒளிப்பதிவு, கலை மற்றும் படத்தொகுப்பு போன்ற அனைத்து அம்சங்களும் மிக சிறப்பாக அமைந்திருந்தன.
இந்தியா - பாகிஸ்தான் போரின் மறைக்கப்பட்ட பகுதியை சொல்லும் காஸி படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியதோடு, வணிகரீதியிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது காஸி. ஆனால் காஸி படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு வழங்கவில்லை என்பதுதான் அதிர்ச்சி.
இது குறித்த காரணத்தை அறிய முற்பட்டபோது, காஸி படத்தைத் தயாரித்த பட நிறுவனங்கள் பதில் அளிக்கவில்லை. ஆனால் காஸி படத்துக்கு வரிவிலக்கு வழங்குவதற்கு பெரும் தொகை கேட்கப்பட்டதாகவும், அதற்கு தயாரிப்பு தரப்பு உடன்படாத காரணத்தால், காஸி படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை என படத்துறையில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தேசப்பற்றை வலியுறுத்தும் படத்துக்கே இந்த கதியா?