சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் டீசர் ரெடியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டீசரில் இடம் பெறும் காட்சிகள் படத்தில் இருக்காதாம். டீசருக்கான தனியாக ஷுட் செய்து அதில் கிராபிக்ஸ் காட்சிகளை இணைத்துள்ளார்களாம். டீசரில் ஒரு ரோபோ சிலந்தி இடம் பெற்றுள்ளதாம். அந்த ரோபோ சிலந்தியை மட்டும் பல லட்ச ரூபாய் செலவில் உருவாக்கியிருக்கிறார்கள். டீசருக்காக மட்டுமே சில கோடிகளை செலிவிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
மகேஷ்பாபு தமிழில் முதல்முறையாக நேரடியாக நடிக்கும் படம் என்பதால் படத்தை மிகவும் பிரம்மாண்டமாகச் செலவு செய்து தயாரித்துள்ளார்கள். படத்தின் பெயரை இன்னும் அறிவிக்காத நிலையில் விரைவில் முதல் பார்வையுடன் படத்தின் பெயரை அறிவிக்க வாய்ப்புள்ளது.
அதற்கடுத்த சில நாட்களில் படத்தின் டீசரை வெளியிடலாம் என்று தெரிகிறது. சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாராகிவரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.