Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நூற்றாண்டு கண்ட இயக்குநர் ஆன்டனி மித்ராதாஸ் காலமானார் - உடல் தானம்

21 பிப், 2017 - 13:22 IST
எழுத்தின் அளவு:
Director-Antony-Mitradas-pasess-away-at-age-of-103

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவரும், பழம்பெரும் இயக்குநருமான ஆன்டனி மித்ராதாஸ், வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 103. தயாலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் படங்களை இயக்கியவர் இயக்குனர் மித்ராதாஸ். தன்னுடய முதல் படத்தில் பி.யு. சின்னப்பாவை இயக்கிய இவர் பின் இரண்டாம் உலக போரில் ஒரு வீரராக தன் பங்கை ஆற்றினார்.


பின்னர் மீண்டும் திரையுலகிற்கு வந்த இவர், பிழைக்கும் வழி, பால்யசகி, அவகாசி, மலையாளத்தில் ஹரிசந்திரா போன்ற வெற்றி படங்களை இயக்கினார். இவர் கடைசியாக 1960ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான சிவகாமி படத்தை இயக்கினார்.


பின் நீண்ட நாட்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் 57 ஆண்டுகள் கழித்து தற்போது முதலாம் உலக போரை மையமாக கொண்ட படம் ஒன்றை இயக்க முடிவு செய்திருந்தார். தன்னுடைய 103 வயது வரையிலும் அயராது உழைத்த இவர் நேற்று மாலை காலமானார். இவரது கண்கள் தானம் செய்யப்பட்டு தற்போது அவரது உடலும் ராமசந்திரா ஆராய்ச்சி கழகத்திற்கு தானம் அளிக்கப்படவிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in