தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
படத்தின் தலைப்புக்கு ஏற்ற மாதிரியே நடிகர் அருள்நிதி மெளன குருதான் என்று, மெளனகுரு பட நாயகி இனியா கூறியுள்ளார். வம்சம், உதயன் படங்களுக்குப் பிறகு அருள்நிதி நடிக்கும் புதிய படம் மெளன குரு. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக இனியா அறிமுகமாகிறார். படத்தின் பாடல் வெளியீட்டுக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் அருள் நிதி, இனியா உள்ளிட்ட படக்குழுவினர்.
அப்போது அருள்நிதி கூறுகையில், படத்தில் நான் ஒரு கோபக்காரர், ஆனால் அமைதியான இளைஞராக வருகிறேன். இந்தப் படத்தின் கதையை கேட்டபோது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அதேசமயம் படத்தில் நடித்து முடித்ததும் எனக்கு மிகத் திருப்தியாக இருந்தது. படத்திலேயே எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது ஆக்ஷன் காட்சிகள் அல்ல, இனியாவுடனான காதல் காட்சிகள்தான். பொதுவாகவே பொண்ணுங்க கூட பேசவே எனக்கு ரொம்ப கூச்சம். அப்படிப்பட்ட என்னைப் போய் ஹீரோயினுக்கு கிஸ்ஸெல்லாம் அடிக்கச் சொன்னா... கஷ்டமாத்தானே இருக்கும். ஆனாலும் சமாளிச்சிக்கிட்டேன், என்றார்.
மெளனகுருவில் நடித்த அனுபவம் பற்றி இனியா கூறுகையில், "ஹீரோ அருள்நிதி அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருப்பார். படத்தின் தலைப்புக்கு ஏற்ற மாதிரி மெளனகுருதான் அவர், என்றார்.