Advertisement

சிறப்புச்செய்திகள்

என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஜெயராமை குத்துப்பாட்டுக்கு ஆடவைத்த நடன இயக்குனர் ஜாய்மதி!

21 பிப், 2017 - 09:33 IST
எழுத்தின் அளவு:
joymathi-made-jayaram-to-dance-for-a-folk-song

அட்றா மச்சான் விசிலு, சும்மாவே ஆடுவோம், ஏகனாபுரம் உள்பட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் ஜாய்மதி. தற்போது மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களுக்கும் நடனம் அமைத்து வருகிறார். இதில், அச்சயன்ஸ் என்ற மலையாள படத்தில் நடிகர் ஜெயராமை குத்துப்பாட்டுக்கு ஆட வைத்தது புதுமையான அனுபவம் என்கிறார் அவர்.


அந்த அனுபவம் குறித்து ஜாய்மதி கூறுகையில், நடனத்திற்கு மொழி பேதமில்லை. எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் பாடலுக்கேற்ற நடனத்தை கொடுக்க வேண்டும். அதேசமயம், தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் இருந்து மலையாள சினிமா கொஞ்சம் மாறுபட்டது. இயல்புத்தன்மை அதிகமாக இருக்கும். கூடவே பாடலில்கூட கதையை சொல்லி விடுவார்கள். அந்த வகையில், மலையாளத்தில் தற்போது ஜெயராம் நடித்து வரும் அச்சயன்ஸ் படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் அமைத்தது எனக்கு புதுமையான அனுபவமாக இருந்தது.


காரணம், தமிழ்ப்படங்களில் டாஸ்மாக்கில் சரக்கு அடித்தபடி நடிகர்கள் ஆடிப்பாடுவது போன்று இந்த படத்தில் கள்ளுக்கடைக்கு சென்று குடித்து விட்டு ஜெயராம்-உன்னி முகுந்தன் இருவரும் ஆடிப்பாடுவது போன்று அந்த பாட லுக்கு நடனம் அமைத்தேன். குறிப்பாக, வாயசைவு என்பது இல்லாமல் பின் னணியில் பாடல் ஒலிக்க அவர்கள் நடனமாடுவார்கள். அந்தபாடலில் ஒரு பெரிய கதையையும் சொல்ல வேண்டும் என்று இயக்குனர் கண்ணன் தாமரக்குளம் சொன்னதால், அதற்கேற்ப பல விசயங்களை நடனத்தில் சொல்லும் வகையில் அமைத்தேன். அது எனக்கு நல்லதொரு அனுபவமாக அமைந்ததோடு நல்ல பெயரையும் வாங்கித்தந்தது.


மேலும், மார்ச் மாதம் அச்சயன்ஸ் படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், மேலும் இரண்டு மலையாளப் படங்களுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதோடு தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் உருவாகும் ஒரு மெகா படத்திற்கும் நடனம் அமைக்கிறேன். ஆக, தற்போது நான் தென்னிந்திய சினிமா அளவில் பரவலாக பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறேன் என்கிறார் ஜாய்மதி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in