அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
சமீபகாலமாக படங்களின் பர்ஸ்ட் லுக், டீசர் என ஒவ்வொன்றையும் வெளியிட்டு அது ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு பெறுகிறது என்பதை ஆராய்கிறார்கள். அந்த வகையில், ரஜினி, விஜய், அஜீத், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட மெகா நடிகர்கள் நடித்த படங்களை அவர்களது ரசிகர்கள் இணையதளங்களில் பெரிய அளவில் போட்டி போட்டு டிரண்ட் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில், தற்போது ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்கள் நடித்த படங்களின் பர்ஸ்ட் லுக், டீசர்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்தவகையில், ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் டீசரை இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர். அதையடுத்து நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள டோரா படத்தின் டீசர் வெளியிடப்பட்டு இரண்டே நாட்களில் 16 லட்சத்திற்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர். ஆக, ஜோதிகா பட ஹிட்ஸை வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறது நயன்தாராவின் டோரா டீசர்.