இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த 2012ல் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் 'ஷட்டர்'. மலையாள இயக்குனர் ஜாய் மேத்யூ இயக்கிய இந்தப்படத்தில் சீனிவாசன், லால், வினய் போர்ட் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தார்கள். ஊரிலேயே அந்தஸ்தான மனிதன் ஒருவன் விலைமாது ஒருத்தியிடம் சுகம் அனுபவிக்கவேண்டி, பூட்டிய அறைக்குள் சிக்கிக்கொண்டு, தனது மனைவி குழந்தை மற்றும் ஊராருக்கு தெரிந்தால் மானம் போய்விடுமே என ஒருநாள் முழுவதும் அனுபவிக்கும் பதற்றம் தான் படத்தின் மொத்தக்கதையும்.. ஒரு ஷட்டர் மூடிய கடையை வைத்தே இரண்டு மணி நேரம் விறுவிறுப்பாக படத்தை இயக்கியிருந்தார் ஜாய் மேத்யூ. தேவி படத்தில் பிரபுதேவாவின் தந்தையாக நடித்தாரே அவர்தான்.
தமிழ் (ஒருநாள் இரவில்), இந்தி, மராத்தி மற்றும் பஞ்சாபி என நான்கு மொழிகளில் ரீமேக்கானதே இந்தப்படத்தின் கதைக்கு மிகப்பெரிய பாராட்டாகும்.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்படி ஒரு ஹிட்டை கொடுத்த பின்னர், அடுத்ததாக படம் எதுவும் இயக்காமல், கதையும் எழுதாமல் மிகவும் பிசியான குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார் ஜாய் மேத்யூ.. ஆனால் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் கதை எழுத ஆரம்பித்திருக்கிறாராம்.. இந்தக்கதை மெகாஸ்டார் மம்முட்டி நடிக்கும் படத்துக்காக. மம்முட்டியுடன் தொடர்ந்து நான்கைந்து படங்களில் ஜாய் மேத்யூ நடித்தபோது ஏதேச்சையாக உருவான ஒன்லைன் ஒன்று மம்முட்டிக்கு பிடித்துப்போக, அதை டெவலப் பண்ண சொல்லிவிட்டாராம் மம்முட்டி.. ஆனால் கதை மட்டும் தான் ஜாய் மேத்யூ.. படத்தை கிரிஷ் என்பவர்தான் இயக்க இருக்கிறாராம்.