தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் பாபி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் “ஜெய் லவகுச”. ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரரும், நடிகருமான கல்யாண் ராம் தயாரிக்கவிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். மூன்று வேடங்களில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டு வரும் இப்படத்தில் ராக்ஷி கண்ணா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தமன்னா, காஜல் அகர்வால் என முன்னணி நடிகைகளிடம் இப்படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. இன்று (பிப் 20) ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. மார்ச் இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகளில் ஜுனியர் என்.டி.ஆர் கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது.