தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969-ம் ஆண்டு வெளிவந்த படம் அடிமைப்பெண். வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான ஜெயலிதா, எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படம். இதில் எம்.ஜி.ஆர். இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார். ஜெயலலிதாவும் இரண்டு வேடத்தில் நடித்திருந்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் ஜோதிலட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், சோ, ராஜஸ்ரீ, அசோகன், சந்திரபாபு, பண்டரிபாய் ஆகியோரும் நடித்திருந்தார்கள். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார். கே.சங்கர் இயக்கி இருந்தர்.
ஜெயலிதாவைப்போல எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இந்த படத்தில்தான் "ஆயிரம் நிலவே வா..." பாடல் மூலம் அறிமுகமாகியிருந்தார். "அம்மா என்றால் அன்பு..." என்ற தனது முதல் பாடலை ஜெயலலிதா பாடியிருந்தார். பிரமாண்டமான வெற்றிப் படமாக இது அமைந்து, வெள்ளி விழா கொண்டாடியது.
48 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை தி ரிஷிஸ் மூவீஸ் பட நிறுவனத்தை சேர்ந்த சாய் நாகராஜன்.டிஜிட்டலில் அதி நவீனப்படுத்தி வெளியிடுகிறார். "இன்றைய நவீன டெக்னிக்கல் அம்சங்களை சேர்த்து புதுப்பொலிவுடன் அடிமைப்பெண் வெளிவர இருக்கிறது. எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த கால கட்டத்தில் அடிமைப்பெண் படத்தை நவீனப்படுத்தி வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்கிறார் சாய்நாகராஜன்.கே.