பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‛ஐ' படத்தில் நடித்த லண்டன் நடிகை எமிஜாக்சன், தற்போது ரஜினி-அக்ஷ்ய்குமாரை வைத்து அவர் இயக்கி வரும் ‛2.O' படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். ஐ படத்தைப்போலவே இந்த படத்திலும் கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ள எமிஜாக்சன், ஆக்சன் காட்சிகளிலும் நடிக்கிறார். குறிப்பாக, இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் அக்சய்குமாருக்கும், எமிஜாக்சனுக்குமிடையே ஒரு அதிரடியான சண்டை காட்சி உள்ளது. அந்த காட்சியை இன்று முதல் சென்னையில் படமாக்குகிறார் ஷங்கர்.
மேலும், எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் அந்த படத்தை விட கூடுதல் பட்ஜெட்டில், அதாவது ரூ.450 கோடியில் தயாராவதால், ஹாலிவுட் படம் பார்த்த திருப்தியை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்கிறார்கள். ஏற்கனவே ரஜினி-அக்ஷ்ய்குமார் நடித்த சண்டை காட்சியை பிரமாண்டமாக படமாக்கிய நிலையில், தற்போது எமியுடன் அக்சய்குமார் நடிக்கும் இந்த சண்டை காட்சியையும் ஹாலிவுட் பட சண்டை காட்சிகளைப்போன்று படமாக்கப்போகிறாராம் ஷங்கர். இந்த ஒரு சண்டை காட்சி கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக நடக்கும் என்கிறார்கள்.