‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட் ஹீரோக்களால் ஒரு மலையாள படம் பப்ளிசிட்டி வெளிச்சத்தில் மிதக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அது உண்மைதான். மலையாளத்தில் உருவாகியுள்ள 'வீரம்' படத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டதுடன் தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார் ஹ்ரித்திக் ரோஷன்.. இப்போது அடுத்ததாக இந்த டீசரை பார்த்துவிட்டு ஆமிர்கானும் பாராட்டியுள்ளார்.. காரணம் இந்தப்படத்தின் ஹீரோ பாலிவுட் நடிகரான குணால் கபூர் என்பதும் இந்தப்படம் இந்தியிலும் வெளியாவதும் தான்.
இந்தப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஜெயராஜ், இந்தியிலும் இந்தப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே பாலிவுட் நடிகரான குணால் கபூரை இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிக்க வைத்துள்ளார். ஷேக்ஸ்பியர் எழுதிய 'மொஹபத்' என்கிற நாவலை தழுவி வரலாற்று படமாக சுமார் 35 கோடியில் இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் சந்து என்கிற மாவீரனாக நடித்திருக்கிறார் குணால் கபூர்.