டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இசையமைப்பாளர் அனிருத்தை தான் நடித்த 3 படம் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தவர் தனுஷ். அதன்பிறகு தான் நடித்த மற்றும் தயாரித்த படங்க ளுக்கும் அவரையே இசையமைக்க வைத்தார். அந்தவகையில், தனுஷின் வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் படங்களுக்கும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார் அனிருத். ஆனபோதும், அதையடுத்து தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி-2, இயக்கி வரும் பவர்பாண்டி ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைக்கவில்லை. சியான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.
இதுபற்றி அனிருத்திடத்தில் இதற்கு முன்பு கேள்விகள் கேட்டபோது அவர் சரியான பதில் கொடுக்கவில்லை. ஆனால் தற்போதும் விஐபி-2வுக்கு தான் ஏன் இசையமைக்கவில்லை என்பது பற்றி அவர் சொல்லவில்லை. மாறாக, சியான் ரோல்டனின் பாடல்களை பாராட்டியுள்ளார். அதாவது, சியான் ரோல்டன் பவர்பாண்டி படத்திற்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார். அதேபோல், விஐபி-2 படத்திற்கும் அவர் நல்ல இசையை கொடுப்பார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் அனிருத்.