வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
இருமுகன் படத்திற்கு பிறகு கெளதம்மேனனின் துருவநட்சத்திரம், வாலு விஜய சந்தரின் கெட்ச் ஆகிய படங்களில் நடிக்க கமிட்டானார் விக்ரம். இதில் கெளதம்மேனன் படம் முதலில் வெளியாக வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்தது. அதனால் அந்த படத்திற்கு முதலில் கால்சீட் கொடுத்தார். ஆனால், பர்ஸ்ட் லுக், டீசர் ரெடி பண்ணிய கெளதம்மேனன், சில தினங்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு சென்றவர், பின்னர் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டார்.
அதனால், அடுத்து தனக்காக காத்துக்கொண்டிருந்த விஜயசந்தர் இயக்கும் கெட்ச் படத்திற்கு தற்போது கால்சீட் கொடுத்து நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது விக்ரம்-சூரி சம்பந்தப்பட்ட சில நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாகி வரும் நிலையில், பிப்ரவரி 28-ந்தேதி வரை அங்கே படப்பிடிப்பு நடக்கிறதாம்.
மேலும், இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. அப்போது விக்ரம் வில்லனுடன் மோதும் காட்சிகள் படமாகிறது. அந்த வகையில், இந்த படத்தில் வில்லனாக இந்தி வில்லன் ரவி கிஷன் நடிக்கிறார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இது. இந்த ரவி கிஷன் இந்தி, தெலுங்கு, கன்னடம், போஜ்புரி என பல மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.