தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
போகன் படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வனமகன் படத்தில் சத்தமில்லாமல் நடித்து வந்த ஜெயம்ரவி, தற்போது அப்படத்தில் நடித்து முடித்து விட்டார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் அவர் காட்டுவாசி கெட்டப்பில் போஸ் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை எகிற வைத்துள்ளது. அந்த வகையில், அப்படத்தில் ஒரு புதுமையான கெட்டப்பில் முதன்முறையாக நடித் துள்ள ஜெயம்ரவி, அதற்கடுத்து மிருதன் டைரக்டர் சக்தி சவுந்திரராஜன் இயக்கும் டிக் டிக் டிக் படத்தில் விண்வெளியில் நடக்கும் கதையில் நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள பிரமாண்டமான விண்வெளி செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. விண்வெளியில் நடக்கும் பேய் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஜெயம்ரவி-நிவேதா பெத்துராஜூடன் மொத்தம் 8 கேரக்டர்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிக்கும் அனைவருமே ஏஞ்சல்களாக நடிப்பதால், ஒவ்வொருவருக்குமே மொத்தம் 10 ஏஞ்சல் உடை களை வடிவமைத்துள்ளனர்.