ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கல்லூரி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் அகில். அதையடுத்து வால்மீகி, மாசாணி, ரெட்டை வாலு, இளமி உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது படைவீரன் என்ற படத்தில் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.
அந்த அனுபவம் குறித்து அகில் கூறும்போது, இளமி படத்தில் வில்லனாக நடித்த நான் தற்போது படைவீரன் படத்தில் போலீஸ் ரோலில் நடித்துள்ளேன். இந்த படத்தில் பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடிக்கிறார். நான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். இளமிக்கு பிறகு இது எனக்கு மிக முக்கியமான படம். இந்த படம் எனக்கு பெரிய ரீச்சைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதனால் அடுத்தபடியாக நார்மலாக இல்லாமல் பவர்புல் வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
மேலும், இளமிக்கு பிறகுதான் இந்த படைவீரன் எனக்கு கமிட்டானது. இளமியில் சரித்திர கால லுக் இருந்தது. இந்த படத்தில் போலீஸ் லுக். அதனால் இந்த படத்திற்கு பிறகு பெரிய படங்கள் எனக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. அதோடு, அடுத்தபடியாக முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் வேடம் வந்தாலும் நடிப்பேன். ஆனால் அந்த வேடத்துக்கு முக்கியத் துவம் இருக்க வேண்டும். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொன்னால் நான் எதிர்பார்க்கிற நடிப்புக்கான விசயங்கள் கிடைக்காது. எந்த கேரக்டராக இருந்தாலும் எக்ஸ்போஸ் பண்றதுக்கான விசயங்கள் இருக்க வேண்டும். பெரிய ஆர்ட்டிஸ்ட் படம் என்றால் பிரச்சினையே இல்லை. அவர்கள் கண்டிப்பாக நல்ல கதையாகத்தான் செலக்ட் பண்ணி நடிப்பார்கள். மக்கள் மனதில் பதிய வேண்டு மென்றால் புதிதாக ஏதாவது பண்ணிக்கொண்டேயிருக்க வேண்டும். அதனால்தான் அவசரகதியில் படங்களை செலக்ட் பண்ணாமல், பொறுமையாக நல்ல படங்களுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் அகில்.