மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பொதுவாக ஹீரோக்கள் பாடகர்களாக மாறி வரும் சூழலில் டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகன் ராஜ் தருண் பாடலாசிரியராக மாறியுள்ளார். “கிட்டு உன்னது ஜக்ரதா” எனும் படத்தில் நடித்து வரும் ராஜ்தருண் அப்படத்தில் இடம்பெறும் ஜானி ஜானி எனும் பாடலை எழுதியுள்ளாராம். இணையதளத்தில் இப்பாடலை வெளியிட படக்குழுவினர் இப்பாடலை நாயகன் ராஜ்தருண் எழுதியாக தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இப்பாடல் கிட்டு உன்னது ஜகர்தா படத்தின் புரமோஷனுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்துள்ளதாக ராஜ்தருண் கூறியுள்ளார். ராஜ்தருணுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கும் இப்படத்தில் வில்லனாக பாலிவுடின் முன்னணி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் நடிக்கின்றார். இப்படத்தில் நடிகை ஹம்ச நந்தினி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அணில் சங்கரா தயாரிப்பில் இயக்குனர் வம்சி கிருஷ்ணா இயக்கும் இப்படத்தை மார்ச் 3ல் திரைக்கு கொண்டுவர படக்குழு முடிவு செய்துள்ளது.