Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கபாலி'யை தொடர்ந்து 'அபி'யுடன் இணைந்த ஏர் ஆசியா..!

17 பிப், 2017 - 15:48 IST
எழுத்தின் அளவு:
airasia-with-aby--after-kabali-movie

கடந்த வருடம் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படத்தில் விமானமும் முக்கிய இடம்பெற்றதால் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஏர் ஆசியா நிறுவனம், கபாலி படத்தின் அதிகாரப்பூர்வ ஏர்லைன் பங்குதாரர் ஆகவும் மாறியது.. இதை அறிவிக்கும் விதமாக ஒரு விமானம் முழுவதும் கபாலி மற்றும் ரஜினி படங்களால் வரையப்பட்டு பப்ளிசிட்டியில் பரபரக்க வைத்தது.. இப்போது 'கபாலி' படத்தை தொடர்ந்து அடுத்ததாக 'அபி' என்கிற மலையாள படத்துடன் விளம்பர பார்ட்னராக கைகோர்த்துள்ளது ஏர் ஆசியா நிறுவனம்..


மலையாள திரையுலகின் இளம் இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசன் நடித்துள்ள படம் தான் 'அபி'.. இது அப்படி ஒன்றும் மெகா பட்ஜெட் படமல்ல என்றாலும் இந்தப்படத்தின் கதைதான் ஏர் ஆசியாவை இந்தப்படத்துடன் கைகோர்க்க வைத்துள்ளது.. ஆம். படத்தின் கதாநாயகன் அபி பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவன்.. அவன் தனிடம் ஒளிந்துள்ள திறமையை வெளிப்படுத்தி தானே சொந்தமாக விமானம் ஒன்றை தயாரிக்கிறான் என்பதுதான் கதை.. படத்தில் விமானம் ஒரு முக்கிய கேரக்டராக இடம் பெறுவதால் தான் ஏர் ஆசியா நிறுவனம் இந்தப்படத்தை புரமோட் பண்ணும் விதமாக இத்துடன் இணைந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in