மிகச் சிறிய படத்தையும் விட்டு வைக்காத பைரசி - Piracy continue for small budget movie also
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மிகச் சிறிய படத்தையும் விட்டு வைக்காத 'பைரசி'

17 பிப், 2017 - 13:30 IST
எழுத்தின் அளவு:
Piracy-continue-for-small-budget-movie-also

தமிழ்த் திரையுலகில் புதிதாக வெளியாகும் படங்கள் 'பைரசி' இணையதளங்கள் படம் வெளியாகும் அன்றே அவர்களது இணையதளங்களில் வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கிறார்கள். அவர்களை சட்ட ரீதியாக நிரந்தரமாகத் தடுப்பது பற்றி திரையுலகத்தைச் சார்ந்தவர்களும், சம்பந்தப்பட்ட அரசுகளும் எந்தவிதமான முயற்சியில் ஈடுபடாமலே இருக்கிறார்கள். இதனால், வெளிவரும் பல பெரிய படங்கள் மிகப் பெரும் நஷ்டத்தை வசூல் ரீதியாக சந்தித்து வருகின்றன. படங்களை இணையதளங்களில் வெளியிடுவது அப்பட்டமான திருட்டுத் தனம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்த மாதிரி தெரியவில்லை.


பெரிய படங்களைத்தான் அப்படி 'பைரசி' இணையதளங்களில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று பார்த்தால் கடந்த வாரம் வெளிவந்த மிகச் சிறிய படத்தையும் பதிவேற்றி அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள்.


கடந்த வாரம் 10ம் தேதி 'லைட்மேன்' என்ற மிகச் சிறிய படம் ஒன்று வெளிவருவதற்கு ஒரு நாள் முன்னதாக 9ம் தேதியே 'தமிழ் ராக்கர்ஸ்' உட்பட பல இணையதளங்களில் திருட்டுத்தனமாகப் பதிவேற்றியுள்ளார்கள் என்று அந்தப் படத்தில் நாயகனாக நடித்த கார்த்திக் நாகராஜன் அவருடைய முகப்புத்தகத்தில் இது குறித்து வேதனையுடன் ஒரு பதிவை எழுதியுள்ளார்.


அவருடைய பதிவை பிரகாஷ்ராஜ், பிரசன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகர்கள் ஷேர் செய்து தங்களது வேதனைகளையும் பகிர்ந்துள்ளனர்.


இனியும், திரையுலகத்தினர் அமைதியாக இருந்தால் இது போன்ற பலர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


Advertisement
‛வேலைக்காரன் - ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்‛வேலைக்காரன் - ரஜினி பட டைட்டிலில் ... லிங்குசாமி - அல்லு அர்ஜுன் படம் 'டிராப்பா' ? லிங்குசாமி - அல்லு அர்ஜுன் படம் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film 88
  • 88
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :எம்.மதன்
  Tamil New Film vikram veda
  • விக்ரம் வேதா
  • நடிகர் : விஜய் சேதுபதி ,
  • நடிகை : வரலெட்சுமி
  • இயக்குனர் :புஷ்கர் - காயத்ரி
  Tamil New Film thiri
  • திரி
  • நடிகர் : அஸ்வின் காக்மானு
  • நடிகை : சுவாதி ரெட்டி
  • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
  Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in