Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛வேலைக்காரன் - ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்

17 பிப், 2017 - 13:27 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-movie-titled-as-Vellaikaran

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு இன்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நண்பகல் 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி படத்திற்கு ‛வேலைக்காரன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது 1987-ம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, அமலா நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் தலைப்பாகும்.


சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இன்னொரு முக்கியமான ரோலில் மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சினேகா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், தம்பி ராமையா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தனி ஒருவன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மோகன்ராஜா இயக்கி வரும் இந்தப் படத்தை ஆகஸ்ட் 24ம் தேதி வினாயகர் சதுர்த்தியன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.


சிவகார்த்திகேயன், தனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கொண்டாடினார். வேலைக்காரன் பட தலைப்போடு பெரிய பேனர், அலங்கரீக்கப்பட்ட தோரணங்கள், கேக்கிலும் சிவகார்த்திகேயனின் பெயர் மற்றும் வேலைக்காரன் பட தலைப்பு என பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்.


கடந்த வருடமும் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று தான் ரெமோ படத்தின் தலைப்பை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in