ஏப்., 30 முதல் ஒலிக்க தயாராகும் கமலின் மையம் விசில் ஆப் | தமிழ் சினிமாவை இந்திய சினிமாவே திரும்பி பார்க்கிறது : விஷால் | உன்னி முகுந்தனுக்கு டிப்ஸ் கொடுத்த அனுஷ்கா | கடவுள் என்னை மன்னிக்கமாட்டார் : பிருத்விராஜ் | எர்ணாகுளம் சாலைகளில் இளைஞர்களை பதறவைத்த மம்முட்டி | விஜய் ஆண்டனியை மாற்றிய அண்ணாதுரை | கைகொடுக்கும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் | தியா படத்துக்கு முன்னுரிமை ஏன்? | குழந்தைக்குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார் | பாடகியான சிவகுமாரின் மகள் |
அனேகன் படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கி உள்ள படம் கவண். ஒய் வடிப மரக் குச்சியில் ரப்பர் டேப்பை கட்டி அதில் கல் வைத்து வீசும் கருவிக்கு கவண் என்ற பெயர். கிராமப்புறங்களில் கவட்டை என்பார்கள். விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், டி.ராஜேந்தர், பாண்டியராஜன், விக்ராந்த் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது.
தயாரிப்பு தரப்பிலிருந்து கசிந்த படத்தின் கதை இது... பிரபல பைபிள் கதை ஒன்று தான் படத்தின் மைய கரு. டேவிட் என்ற சின்னஞ் சிறுவன் கோலியாத் என்ற பெரிய அரக்கனை கவண் கொண்டு வீழ்த்துவான். கோலியாத் அளவிற்கு டேவிட்டுக்கு பலம் கிடையாது. ஆனால் தன் புத்திசாலி தனத்தால் அவனை வீழ்த்துவான். அதுபோல இந்தப் படத்தில் விஜய்சேதுபதி என்கிற சாதராண இளைஞன் ஒரு பெரிய கார்பரேட் கம்பெனியை எதிர்த்து போராடி ஜெயிக்கிற கதை.
ரத்தம் தெறிக்கும் சண்டை பாய்ந்து அடிக்கி சண்டை எதுவும் கிடையாது. ஆனால் கார்பரேட் கம்பெனியின் சூழ்ச்சிகளை சூழ்ச்சியால் வெல்கிற கதை. வெளிச்சுவர் முழுவதும் கண்ணாடி பதிக்கப்பட்ட கார்பரேட் கம்பெனிகளின் இன்னொரு முகத்தை காட்டுகிற படமாக உருவாகி உள்ளது. இந்தப்படம் திட்டமிட்டு 3 மாதத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா மார்டன் இளைஞனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவருடன் அடிக்கடி சண்டை போடும் காதலியாக மடோனா நடித்திருக்கிறார். விரைவில் வெளிவருகிறது.