ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டி, நடிகர் திலகம் சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் உள்ளிட்ட ஏராளமான தமிழ், தெலுங்கு படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் டி.பிரகாஷ்ராவ். இவரது பேரன் டி.சத்யா தற்போது தெலுங்கில் இளம் முன்னணி இயக்குனர். பீபிலி கபடி ஜட்டு, எஸ்.எம்.எஸ், சங்கரா படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கும் முதல் தமிழ் படம் யார் இவன்?.
சச்சின், ஈஷா குப்தா, பிரபு, கிஷோர் குமார், சதீஷ், வெண்ணிலா கிஷோர் நடிக்கிறார்கள். ரனியா ஜோஷி தயாரிக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார், பிருந்தா மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இது ஒரு ஹாரர் பிலிம், தொடர்ச்சியாக கொலைகளை செய்யும் ஒரு சைக்கோ கில்லரை போலீஸ் வேட்டையாடுகிற கதை. படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் வெளிவர இருக்கிறது.