கேக்கிறான் மேய்க்கிறான் தலைப்புக்கு இயக்குனர் விளக்கம் - New movie titled as kekran mekran
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேக்கிறான் மேய்க்கிறான் தலைப்புக்கு இயக்குனர் விளக்கம்

17 பிப், 2017 - 10:21 IST
எழுத்தின் அளவு:
New-movie-titled-as-kekran-mekran

புதியவர்கள் இணைந்து தயாரிக்கும் ஒரு படத்துக்கு கேக்கிறான் மேய்க்கிறான் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். அஸ்விகா கிரியேஷன் சார்பில் லயன் பிரின்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சபா, லூப்னா அமீர் என்ற புதுமுகங்களுடன் ஆடுகளம் நரேன், சபீதா ஆனந்த், பிளாக் பாண்டி, மதுமிதா நடிக்கிறார்கள். கார்த்திக் பாலா ஒளிப்பதிவு செய்கிறார், ஆதித்ய மகாதேவன் இசை அமைக்கிறார். படத்தின் தலைப்பு பற்றி இயக்குனர் எஸ்.சாம் இமானுவேல் அளித்த விளக்கம் இது...


ஹீரோவும் அவனது நண்பர்கள் நான்கு பேரும் இணைந்து ஒரு மாடலிங் கம்பெனி ஆரம்பிக்கிறார்கள். பின்னணி இசை முழங்க அழகிகள் ஒய்யார நடைபோட்டு வருவதுதான் மாடலிங். அதற்கு பொருத்தமாகவும், கலோக்கியலாகவும் பெயர் வைக்க விரும்பும் நண்பர்கள் தங்கள் நிறுவனத்துக்கு கேக்கிறான் மேய்க்கிறான் என்று பெயர் வைக்கிறார்கள். இந்த வித்தியாசமான பெயரே அவர்கள் கம்பெனியை பெரிய லெவலுக்கு கொண்டு வருகிறது.


ஒருகட்டத்தில் இந்த கம்பெனியை ஆரம்பித்ததே ஹீரோயின் வீட்டில் ஆட்டையபோட்ட பணத்தை கொண்டுதான் என்பது தெரிய வருகிறது. இதனால் ஹீரோயின் தன் காதலன் ஒரு திருடன் என்ற நினைத்து விலகுகிறாள். ஆனால் நண்பர்கள் செய்ததற்கும் ஹீரோவுக்கும் சம்பந்தம் இல்லை. இதை காதலிக்கு புரிய வைத்து நண்பர்களையும் திருட்டு பழியிலிருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. சென்னை நாகர்கோவில், கன்னியாகுமரி, பாபநாசம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இது ஒரு முழுநீள காமெடி படம். என்கிறார் இயக்குனர் இமானுவேல்.


Advertisement
இன்று மதியம் 12.30 மணிக்கு சிவகார்த்திகேயன் பட டைட்டீல் அறிவிப்பு!இன்று மதியம் 12.30 மணிக்கு ... பழம்பெரும் இயக்குனரின் பேரன் இயக்கும் யார் இவன்? பழம்பெரும் இயக்குனரின் பேரன் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film manik
  • மாணிக்
  • நடிகர் : மா.க.பா.ஆனந்த்
  • நடிகை : சூசா குமார்
  • இயக்குனர் :மார்ட்டின்
  Tamil New Film Melanattu marumagan
  Tamil New Film Mom
  • மாம்
  • நடிகை : ஸ்ரீ தேவி
  • இயக்குனர் : ,ரவி உத்யவர்
  Tamil New Film Puyala Kilambi Varom

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in