இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தனி ஒருவன் படத்தை அடுத்து தனது புதிய படத்தில் சிவகார்த்திகேயனை இயக்கி வருகிறார் மோகன்ராஜா. நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ், பகத்பாசில், தம்பிராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். காக்கி சட்டை படத்தை அடுத்து இந்த படத்திலும் போலீஸ் ரோலில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
மேலும், சமீபகாலமாக, விஜய், அஜீத் உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்கள் தங்களது பட டைட்டில்களை முன்கூட்டியே அறிவிக்காமல் பல மாதங்களாக ரசிகர்களை காக்க வைத்து பின்னர் அறிவித்து வரும் பாணியை, இந்த படத்தில் இருந்து சிவகார்த்திகேயனும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில், நவம்பர் மாதம் முதல் இந்த படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், இன்று தனது பிறந்த நாள் என்பதால், இன்று மதியம் 12.30 மணிக்கு இப்படத்தின் டைட்டீலை அறிவிக்கிறாராம். ரஜினி நடித்த வேலைக்காரன் பட டைட்டீலை இந்த படத்திற்கும் வைக்க முடிவு செய்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இன்று மதியம் அதற்கு முடிவு தெரிந்து விடும்.