தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இளையராஜாவின் மகன்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரில் முதலில் இசையமைப்பாளரானவர் கார்த்திக் ராஜா. ரஜினி நடித்த பாண்டியன் படத்தில் சிங்கிள் ட்ரேக் இசைப்பணியை தொடங்கியவர், பின்னர் ராஜ்கிரண் நடித்த மாணிக்கம், விஜயகாந்த் நடித்த அலெக்சாண்டர் படங்கள் மூலம் இசையமைப்பாளராக உருவெடுத்தார். ஆனபோதும் அவரால் முன்னணி இசையமைப்பாளராக முடியவில்லை. இருப்பினும் தனது தந்தை இளையராஜா இசையமைத்த பல படங்களுக்கு தொடர்ந்து பின்னணி இசையமைத்து வந்தார்.
அந்த வகையில், சமீபத்தில் அரண்மனை, தில்லுக்குத்துட்டு படங்களுக்கு பின்னணி இசையமைத்த கார்த்திக் ராஜா, தற்போது பகடி ஆட்டம் படத்தைத் தொடர்ந்து படைவீரன் உள்பட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதோடு, இளையராஜா பாணியில் பின்னணி இசையில் கார்த்திக்ராஜாவும் ஸ்கோர் பண்ணுவார் என்பதால் தற்போது சில இளவட்ட டைரக்டர்கள் அவரிடம் பின்னணி இசைக்காக செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால், மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்களுக்கு இசையமைத்தபோதும் பின்னணி இசையில் தனது தனித்திறமையை காட்டுவதில் கூடுதல் ஆர்வம் காட்டப்போகிறாராம் கார்த்திக்ராஜா.