ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விதார்த் நடித்த படம் குற்றமே தண்டனை. அந்த படத்தில் அவர் நெகடீவ் ஹீரோவாக நடித்தார். அதை யடுத்து விழித்திரு, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை, வண்டி, பில்லா பாண்டி என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள ஒரு கிடாயின் கருணை மனு படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
இந்த படத்தில் மிக யதார்த்தமான நாயகனாக நடித்துள்ள விதார்த்துக்கு ஜோடியாக பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா நடித்துள்ளார். கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிறு தெய்வ வழிபாடு குறித்து ஒரு சமூக விழிப்புணர்வு கதை படமாக்கப்பட்டிருக்கிறது. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு மிகப்பெரிய அளவில் ரீச் கிடைத்துள்ளதாம். குறிப்பாக விதார்த் படங்களில் இந்த படத்தின் டீசர்தான் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளதாம். அதனால் இந்த ஒரு கிடாயின் கருணை மனு படம் தனக்கு பெரிய பிரேக் கொடுக்கும் படமாக அமையும் எ ன்கிற நம்பிக்கை விதார்த்துக்கு ஏற்பட்டுள்ளதாம்.