மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கல்லுக்குள் ஈரம், தாவணி கனவுகள், இதயம், ஆயுத எழுத்து, ரெட்டைச்சுழி, அன்னக்கொடி, பாண்டியநாடு என பல படங்களில் நடிகராகவும் தனது இன் னொரு முகத்தை காட்டியவர் இயக்குனர் பாரதிராஜா. தற்போதும் அவர் சில படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அப்படி அவர் நடிக்கும் படங்களில் படைவீரன் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கியுள்ளார்.
இப்படத்தில் தனுஷின் மாரி படத்தில் வில்லனாக நடித்த பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அதிரடி போலீசாக அவர் நடிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா ஒரு எக்ஸ் மில்ட்ரிமேனாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாம். மிடுக்கான தோற்றத்தில் தேசப்பற்றுடன் கம்பீரமாக பாரதிராஜா வசனம் பேசி நடித்துள்ள காட்சிகள் தியேட்டரில் பெரிய அளவில் கைதட்டல் பெறும் என்கிறார்கள். தற்போது படைவீரன் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.