பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ரஜினி நடித்த அதிசய பிறவி படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிங்காங். அதன்பிறகு இதுவரை ஐந்து மொழிகளில் சுமார் 300 படங்களுக்கு மேல் நடித் திருக்கும் அவருக்கு சமீபத்தில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கிங்காங் கூறுகையில், சினிமாவில் நடிகரான பிறகு நான் பல விருது கள் பெற்றிருக்கிறேன். அதில், 2007ல் கலைத்துறையில் சாதனை புரிந்ததற்காக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடமிருந்து விருது பெற்றேன். அந்த விருதை சிங்கப்பூர் அசன்டாஸ் என்ற நிறுவனம் வழங்கியது. அதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கையால் பெற்ற தேசிய விருது முக்கியமானது. ஐந்தாயிரம் மேடை நிகழ்ச்சிகள், ஐந்து மொழிகளில் நடித்த மாற்றத்திறனாளி கலைஞன் என்கிற அடிப்படையில் எனக்கு அந்த விருது மாற்றுத்திறனாளிகள் தினமான 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி கிடைத்தது.
அதன்பிறகு சேலம் தமிழ் சங்கம் திரைக்கலைச்சித்தர் என் விருதினை அளித்தது. இந்த நிலையில்தான், 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந்தேதி வேலூரில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் நியூஜெருசலேம் என்ற நிறுவனம் எனக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது. என்னுடன் சேர்ந்து பலதுறைகளிலும் சாதித்த 16 பேருக்கு அந்த பட்டம் வழங்கப்பட்டது. இந்த தகவல் கோலிவுட்டில் பரவியதை அடுத்து எனது நண்பர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு வாழ்த்தி வருகிறார்கள். இப்படி அவ்வப்போது கிடைக்கும் விருதுகள், பட்டங்கள் கலைத்துறையில் இன்னும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தை எனக்கு கொடுக்கிறது என்கிறார் நடிகர் கிங்காங்.