பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வீரசிவாஜி, கத்திசண்டை என அடுத்தடுத்து தோல்விப்படங்களை தயாரித்த, 'மெட்ராஸ் என்டர்பிரைசஸ்' அடுத்து மீண்டும் விஷாலை வைத்து மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் ஒளிப்பதிவாளரான சி.பிரேம்குமார் இயக்கத்தில் '96' என்ற படமும் உருவாகவிருக்கிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. 96 படத்தில் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். கதாநாயகியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு தடை ஏற்பட காரணமன பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் கடும் கண்டனத்துக்குள்ளானார் த்ரிஷா. இதன் தொடர்ச்சியாய் த்ரிஷா நடிக்கும் படத்துக்கு தமிழ்நாட்டில் ஆதரவு இருக்காது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, த்ரிஷா நடிக்கும் படங்களை தியேட்டர்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக 96 படத்திலிருந்து த்ரிஷாவை நீக்கிவிட முடிவு செய்தாராம் தயாரிப்பாளர். இதுவிஷயமாக விஜய்சேதுபதியிடம் ஆலோசனை செய்தபோது, த்ரிஷாவை நீக்க வேண்டாம் என்று சொல்லி த்ரிஷாவுக்காக பரிந்து பேசியிருக்கிறார் விஜய்சேதுபதி.